அடர்ந்த காடுகளை உருவாக்க மரக்கன்றுகள் நடும் விழா கலெக்டர் தொடங்கி வைத்தார்
அடர்ந்த காடுகளை உருவாக்க மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
காரைக்குடி,
காரைக்குடியில் ஊர் கூடி ஊருணி அமைப்போம் என்ற சமூக நல அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வள்ளிச்சரன் ஏற்பாட்டில் அடர்ந்த காடுகள் உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேனாற்றங் கரையோரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் ஜெயகாந்தன் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தோள் கொடு தோழா மனித உரிமை கழகம், அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி நாட்டுநலத்திட்டப்பணி திட்ட மாணவர்கள், அரியக்குடி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ராமநாதன் செட்டியார் நகர்மன்ற உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், கோவிலூர் பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடப்படும் 5 ஆயிரம் மரக்கன்றுகளும் சொட்டுநீர் பாசனம் மூலம் ஓராண்டுக்கு பராமரிக்க ஆட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். சுனாமிக்கு பின்பு ஜப்பான் நாட்டில் மியாவக்கி என்ற திட்டத்தின் கீழ் அங்கு அடர்ந்த காடுகள் உருவாக்கப்பட்டன.
இந்தநிலையில் காரைக்குடி பகுதியில் இதுபோன்ற திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு அடர்ந்த காடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைப்பினர் தெரிவித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் மரம் வளர்ப்பு பற்றி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story