திருவள்ளூரில் ஊராட்சி செயலாளரை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை


திருவள்ளூரில் ஊராட்சி செயலாளரை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 2 July 2019 3:45 AM IST (Updated: 1 July 2019 10:41 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில், ஊராட்சி செயலாளரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவாலங்காடு பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங் களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் திருவாலங்காடு ஊராட்சியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி ஊராட்சி செயலாளர் சரியான முறையில் கிராமசபை கூட்டத்தை நடத்தாமல், நடத்தியது போல் பொதுமக்களிடம் கையெழுத்துகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் அவர் யாருக்கும் கிராமசபை நடைபெறுவது குறித்து முறையான தகவல் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். மேலும் இவர் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

எங்கள் பகுதியில் எந்த ஒரு வளர்ச்சிப்பணிகளும் நடைபெறவில்லை. எனவே ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்து விட்டு சென்றனர்.

Next Story