‘ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது’ ஊத்துக்கோட்டை பெட்ரோல் பங்குகளில் அமல்
ஹெல்மெட் அணியாமல் வந்தால் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் விற்பனை கிடையாது என்ற பங்க் உரிமையாளர்களின் அறிவிப்பு அமலுக்கு வந்தது.
ஊத்துக்கோட்டை,
வாகன ஓட்டிகள் சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தான் சாலைகளில் அதிக விபத்து ஏற்பட்டு பலர் பலியாவதாக புள்ளி விவரம் சமீபத்தில் வெளிவந்தது.
இதனையடுத்து ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசிடம் கேள்வி கேட்டது.
இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, வெங்கல், பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமை தாங்கி பேசினார். அதில், மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் நிரப்ப வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது, ஜூலை 1-ந் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க மாட்டோம். அதேபோல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வந்தாலும், மது குடித்து வந்தாலும், பெட்ரோல் வழங்க மாட்டோம் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உறுதியளித்து இருந்தனர்.
இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி ஊத்துக்கோட்டை திருவள்ளூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அதைத்தொடர்ந்து ஹெல்மெட் அணிய வலியுறுத்தி போலீசார் கலந்துகொண்ட மோட்டார் சைக்கிள் பேரணி நடை பெற்றது.

Related Tags :
Next Story