பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை விலாங்கு மீன்


பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை விலாங்கு மீன்
x
தினத்தந்தி 2 July 2019 3:45 AM IST (Updated: 1 July 2019 10:48 PM IST)
t-max-icont-min-icon

மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து கரைதிரும்பிய பாம்பன் மீனவர்கள் வலையில் அரிய வகை விலாங்கு மீன் பிடிபட்டது.

ராமேசுவரம்,

பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 100 விசைப் படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பினர். இந்த மீனவர்களுக்கு மாவுலா, முரல், விளை மீன், கிளி, திருக்கை உள்ளிட்ட பல வகை மீன்கள் கிடைத்திருந்தன.

ஒவ்வொரு படகிலும் 1 டன் வரையிலும் மீன்கள் பிடிபட்டு இருந்தன.மேலும் ஒரு விசைப் படகில் அரிய வகை மீனான கடல் விலாங்கு மீன்கள் சிக்கியிருந்தன. ஒவ்வொரு மீனும் சுமார் 5 அடி நீளமும், 110 கிலோ வரை எடை இருந்தன.இதுபற்றி பாம்பன் மீனவர் பேட்ரிக் கூறியதாவது:-

பாம்பனில் மீன் பிடித்து கரை திரும்பியுள்ள மீனவர்கள் ஒவ்வொரு படகிலும் 1 டன் வரையிலும் மீன்கள் பிடிபட்டுள்ளன.மீன்கள் அதிகஅளவில் கிடைத்தும் குறைந்த விலைக்கு தான் வியாபாரிகள் வாங்கி உள்ளனர்.

இதனால் மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை. விலாங்கு மீனானது நடுக்கடலில் சேற்றில் உயிர்வாழும். அதிவேகமாக நீந்தும் தன்மை கொண்டது.விலாங்கு மீனை பார்ப்பதற்கு பாம்புபோல் தோற்றம் கொண்டதாக இருக்கும். இந்த விலாங்கு மீன் கழுத்து பகுதியில் இருந்து வயிற்றுப்பகுதி வரையிலும் நெட்டி என்று சொல்லக்கூடிய சதை இருக்கும். இந்த நெட்டி மருத்துவ குணம் மிக்க தாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story