தஞ்சை பெரியகோவில் அருகே ரூ.2 கோடியில் நவீனமயமாகும் பெத்தண்ணன் கலையரங்கம்
தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கம் ரூ.2¾ கோடியில் நவீனமயமாகிறது. இந்த கலையரங்கத்தில் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் காட்சிக்கூடமும் அமைக்கப்படுகிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரச்சி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த கோவிலுக்கு அருகே சிவகங்கை பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கும், பெரியகோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பெத்தண்ணன் கலையரங்கம் உள்ளது. இந்த கலையரங்கம் திறந்த வெளி கலையரங்கம். ஆரம்ப காலக்கட்டத்தில் இந்த கலையரங்கத்தில் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வந்துள்ளன. நாளடைவில் கட்டிடம் சிதிலமடைந்ததை தொடர்ந்து இங்கு எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை.
தற்போது இந்த கலையரங்கம் பகுதியில் இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு ஆண்டு தோறும் பால்குடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
தற்போது தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு ரூ.903 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சிவகங்கை பூங்கா புனரமைப்பு, குளங்கள் பராமரிப்பு, பூங்காக்கள் அமைத்தல், குடிநீர் வசதி மேம்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் தொடங்கி மேற்கொள்ளப் படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக பெத்தண்ணன் திறந்தவெளி கலையரங்கமும் சிரமைக்கப் படுகிறது. 1.18 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பெத்தண்ணன் கலையரங்கத்தில் தற்போது அரங்கம் மையப்பகுதியில் உள்ளது.
தற்போது இந்த கலையரங்கம் ரு.2 கோடியே 85 லட்சம் செலவில் புனரமைக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் இந்த கலையரங்கம் திறந்தவெளி கலையரங்கமாக மாற்றப்படுகிறது. மேலும் இதில் வரலாற்று தொடர்பான காட்சிகளை அறிந்து கொள்ளும் வகையில் திறந்தவெளி திரையரங்கமும் அமைக்கப்படுகிறது. இதில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
இதற்காக முகப்பு பகுதியில் நவீன நுழைவு வாயில், பூங்காக்கள், செடிகள், மரங்கள், புல்தரைகள் போன்றவை அமைக்கப்படுகின்றன. மேலும் மையப்பகுதியில் கலையரங்கம் அமைக்கப்படுவதோடு, முகப்பு பகுதியில் கார், வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்படுகின்றன.
இந்த கலையரங்கம் திறந்த வெளி கலையரங்கமாக அமைக்கப்படுவதோடு, பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கை வசதிகள் உள்ளிட்டவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளுக்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story