மருத்துவமனையில் சிகிச்சை பெற பீட்டர் முகர்ஜிக்கு அனுமதி : ஐகோர்ட்டு வழங்கியது


மருத்துவமனையில் சிகிச்சை பெற பீட்டர் முகர்ஜிக்கு அனுமதி : ஐகோர்ட்டு வழங்கியது
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 2 July 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக இந்திராணி கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாகியும், இந்திராணியின் 3-வது கணவருமான பீட்டர் முகர்ஜியும்  இந்த கொலையில்  கைது ஆனார்.

இந்த நிலையில் சமீபத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிகிச்சைக்காக தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவேண்டும் என அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு அவரை மருத்துவமனையில் 15 நாட்களுக்கு அனுமதிக்க அனுமதி அளித்துள்ளது. மேலும் வரும் 12-ந் தேதிக்குள் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

Next Story