அவுரங்காபாத் ரெயில் நிலைய பெயர் பலகையில் சம்பாஜி நகர் என போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரை பிரக்யாராஜ் என அந்த மாநில அரசு மாற்றியது.
அவுரங்காபாத்,
பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என மாற்றப்படும் என அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மராட்டியத்தில் உள்ள அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் ஆகிய நகரங்களின் பெயரையும் மாற்றவேண்டும் என சிவசேனா வலியுறுத்தி வருகிறது.
இந்தநிலையில், நேற்று சிவசேனா கட்சியினர் அவுரங்காபாத் ரெயில் நிலைய பெயர் பலகையில் ‘சம்பாஜிநகர்' என எழுதப்பட்ட போஸ்டரை கொண்டு வந்து ஒட்டினர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு உண்டானது.
Related Tags :
Next Story