கர்ஜத்-லோனவாலா இடையே சரக்கு ரெயில் கவிழ்ந்து விபத்து


கர்ஜத்-லோனவாலா இடையே சரக்கு ரெயில் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 2 July 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

கர்ஜத்-லோனவாலா இடையே சரக்கு ரெயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மும்பை- புனே ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மும்பை, 

மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கர்ஜத்-லோனவாலா இடையே மலைப்பாதையில் நேற்று அதிகாலை சரக்கு ரெயில் ஒன்று சென்றது. இந்த ரெயில் அதிகாலை 4 மணியளவில் ஜாம்ருங்- தாக்குர்வாடி இடையே சென்று கொண்டு இருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரெயிலின் 15 பெட்டிகள் கவிழ்ந்தன.

தகவல் அறிந்து மத்திய ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சரக்கு ரெயில் தடம்புரண்டதால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சி.எஸ்.எம்.டி.- புனே இந்திரயானி (22105), சி.எஸ்.எம்.டி.- புனே இன்டர் சிட்டி(12127), சி.எஸ்.எம்.டி.- புனே டெக்கான் எக்ஸ்பிரஸ் (11007), புனே- புசாவல், புனே- பன்வெல், பன்வெல்- புனே, புனே- சி.எஸ்.எம்.டி. டெக்கான் எக்ஸ்பிரஸ், புனே- சி.எஸ்.எம்.டி.- பிரகதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. மேலும் பல ரெயில்கள் கல்யாண்- இகத்புரி- மன்மாட் வழியாக திருப்பிவிடப்பட்டது.

சரக்கு ரெயில் தடம்புரண்டு ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் மும்பை- புனே இடையே அதிகளவு பஸ்களை இயக்குமாறு மாநில போக்குவரத்து துறையை மத்திய ரெயில்வே கேட்டுக்கொண்டது.

Next Story