மீனவ கிராமங்களின் வசதிக்காக ரூ.86 லட்சத்தில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க திட்டம் அணுமின் நிலையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்


மீனவ கிராமங்களின் வசதிக்காக ரூ.86 லட்சத்தில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க திட்டம் அணுமின் நிலையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 3 July 2019 3:45 AM IST (Updated: 2 July 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

மீனவ கிராமங்களின் வசதிக்காக ரூ.86 லட்சத்தில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க திட்டம், அணுமின் நிலையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கல்பாக்கம்,

கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையம் தனது கிராம நலக்குழு சார்பில் நிலையத்தை சுற்றியுள்ள புதுப்பட்டினம், வாயலூர், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் மாணவர்கள், விவசாயிகள், மகளிர் முன்னேற்றம் உள்பட பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதனடிப்படையில் ஏற்கனவே புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் பகுதி மீனவர்களின் வருமானத்தை பெருக்க கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைத்துள்ளது.

இதனையடுத்து தற்போது கல்பாக்கம் அடுத்த கடலூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னக்குப்பம், ஆலிக்குப்பம், புது நடுகுப்பம் உள்பட கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற, கடலில் ரூ.86 லட்சம் செலவில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க அணுமின் நிலையம் முடிவு செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள விருந்தினர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்திய அணுமின் கழக வாரிய இயக்குனர் கே.கே.ராஜன் தலைமை தாங்கினார்.

இந்த செயற்கை பவளப்பாறைகள் கடலில் அமைத்த சில மாதங்களில் அந்த பகுதியில் மீன்கள் தங்கி இனப்பெருக்கத்தின் மூலம் மீன்வளம் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story