திருவொற்றியூரில் அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை
திருவொற்றியூரில், அ.தி.மு.க. பிரமுகர், தற்கொலை செய்துகொண்டார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 47). 11-வது வட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர். இவர் ஏ.சி. எந்திரம் பழுதுபார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு சஞ்சய் சித்தார்த் என்ற மகனும், ஹர்ஷவர்த்தினி என்ற மகளும் உள்ளனர்.
நேற்று அதிகாலை மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது சரவணன் வீட்டின் வராண்டாவில் உள்ள ஊஞ்சல் மாட்டும் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story