‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் மயிலாடுதுறையில், நாஞ்சில் சம்பத் பேச்சு


‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் மயிலாடுதுறையில், நாஞ்சில் சம்பத் பேச்சு
x
தினத்தந்தி 3 July 2019 4:30 AM IST (Updated: 3 July 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., நாகை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் நகரசபை தலைவர் பவானி சீனிவாசன் வரவேற்றார். இதில் இலக்கிய பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

இந்தி மொழி மீது நமக்கு தனிப்பட்ட கோபமில்லை. நாங்கள் இந்தியை எதிர்க்கிறோம் என்றால் இந்தி மொழி பேசக்கூடியவர்கள் மீது கொண்டிருக்கிற பகைமை காரணமல்ல. எங்களது இனத்தின் தன்னுரிமையை தக்க வைத்து கொள்வதற்கு இன்னொரு மொழியினுடைய ஆதிக்கம் இடையூறாக இருக்குமானால், அதை எதிர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

எனவே, மும்மொழி கொள்கை என்பது தேவையில்லாத ஒன்று. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை முடிசூட்டி பார்த்த ஆண்டிப்பட்டியில் தற்போது தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வரலாறு மீண்டும் தி.மு.க.வை நோக்கி திரும்புகிறது.

பிரதமர் நரேந்திரமோடியின், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை ஏற்க முடியாது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஏன் கோரிக்கை வைக்கவில்லை. உயிர் பலி வாங்கும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்றார். முடிவில் நகர துணை செயலாளர் தெய்வநாயகம் நன்றி கூறினார்.

Next Story