போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கை பெண் உள்பட 2 பேர் கைது


போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கை பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2019 4:15 AM IST (Updated: 3 July 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

மும்பை விமான நிலையத்தில் ஆமதாபாத் செல்லும் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய பெண் ஒருவர் வந்தார்.

மும்பை, 

பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் இருந்த பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை நடத்தினர். இதில், அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் குகபிரியாவ் (வயது28) என்பதும், இலங்கையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த பாஸ்போர்ட்டை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிராபஸ்மா(59) என்ற பெண் மும்பை சர்வதேச விமான நிலைய கழிவறையில் வைத்து கொடுத்ததாக தெரிவித்தார்.

இதற்காக அவருக்கு ரூ.14 லட்சம் கொடுத்ததும் தெரியவந்தது. இதன்பேரில் விமான நிலையத்தில் இருந்த அந்த பெண்ணையும் அதிகாரிகள் பிடித்து கைது செய்தனர்.

Next Story