அசோக் சவான் ராஜினாமா: மராட்டிய காங்கிரஸ் புதிய தலைவர் பாலாசாகேப் தோரட்?


அசோக் சவான் ராஜினாமா: மராட்டிய காங்கிரஸ் புதிய தலைவர் பாலாசாகேப் தோரட்?
x
தினத்தந்தி 3 July 2019 5:15 AM IST (Updated: 3 July 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பாலாசாகேப் தோரட் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

மும்பை, 

மராட்டியத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த கட்சியால் வெறும் ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியில் இருந்த விலகுவதாக மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தெரிவித்தார்.

மேலும் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைமையிடம் வழங்கினார்.

இந்த நிலையில் மாநில காங்கிரஸ் புதிய தலைவராக பாலாசாகேப் தோரட் நியக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல் மற்ற சமுதாயத்தினருக்கும் இடம் கொடுக்கும் வகையில் அவருடன் மேலும் 3 பேர் செயல் தலைவராக நியமிக்கப்படுவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Next Story