சுவர் இடிந்த விபத்துக்கு மாநகராட்சி காரணம் அல்ல : சஞ்சய் ராவத் கூறுகிறார்


சுவர் இடிந்த விபத்துக்கு மாநகராட்சி காரணம் அல்ல : சஞ்சய் ராவத் கூறுகிறார்
x
தினத்தந்தி 3 July 2019 4:45 AM IST (Updated: 3 July 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 21 பேர் பலியானது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

மும்பை, 

மும்பை மாநகராட்சி பருவ மழையை எதிர்கொள்ள தயாராகவே இருந்தது. ஆனால் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் மாநகராட்சியின் தோல்வி அல்ல. 

புனே மற்றும் மும்பையில் சுவர் இடிந்த சம்பவம் விபத்து தான். இது எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்-மந்திரி ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story