குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சலாம்பேக் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மாநிலக்குழு உறுப்பினர் பூதட்டியப்பா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நாகராஜ் மற்றும் நிர்வாகி மாரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் மலர்மாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோன்று அஞ்செட்டி பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் முனிராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி மாதையன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் லகுமய்யா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆதில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அன்வர்பாஷா தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள்.
இதேபோல் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் பகுதி செயலாளர் ஜெயராமன், மாநிலக்குழு உறுப்பினர் நஞ்சப்பா, நிர்வாகிகள் கெம்பன், நாகராஜ், ரமேஷ், குட்டி (எ) முனிராஜ், சீனிவாஷ், மகளிர் அணி தலைவி சியாமளா, ராஜேஷ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணப்பா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர பகுதிகளில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைச் செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவராசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் மணி, உள்ளாட்சி பணியாளர் சங்க மாநில துணை செயலாளர் கிருஷ்ணன், இண்டூர் வட்டார செயலாளர் குட்டி, நல்லம்பள்ளி வட்டார செயலாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதேபோல் காரிமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கமலாமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். பாலக்கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் மகாதேவன் தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர் தேவராசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்க்குமரன் ,மாநிலக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், நகர செயலாளர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் செங்கொடி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

Related Tags :
Next Story