வானவில் : அட்டகாசமான தயாரிப்பில் உருவான ‘ஹோண்டா ஜீனியோ’
இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் தற்போது ஜீனியோ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது.
இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் தற்போது ஜீனியோ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் மிகவும் அட்டகாசமான வடிவமைப்பில் கம்பீரமான தோற்றத்துடன் இது இந்தோனேசியாவில் அறிமுகமாகியுள்ளது. செயல் திறன், உறுதியான மேல் பாகம், சொகுசான பயணம், அதிக மைலேஜ் என அனைத்திலும் சிறப்பானதாக விளங்குகிறது.
இதில் இ.எஸ்.பி. என்ஜின் உள்ளது. 110 சி.சி. திறன் கொண்ட, அதிக மைலேஜ் தரும் வகையில் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இ.எஸ்.ஏ.எப். (ஸ்மார்ட் ஆர்கிடெக்சர் பிரேம்) கொண்ட இது இலகுவான, ஸ்திரமான, சொகுசான பயணம் உறுதி என்பதை ஜீனியோ உறுதி செய்கிறது.
அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்றதாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவன இயக்குநர் தொஷியுகி இனுமா தெரிவித்துள்ளார். இதில் மூன்று சிறப்பம்சங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வழக்கமான பயன்பாட்டிற்குஇளம் தலைமுறையினர் விரும்பும் அழகிய வடிவமைப்பு, அழகிய கட்டமைப்பு ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்ற வகையில் எத்தகைய சாலை பயணத்துக்கும் ஏற்றதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்கூட்டர் எப்படி இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்களோ அவை அனைத்தையும் ஒருங்கே கொண்டதாக ஜீனியோ உருவாக்கப்பட்டு, அனைவரும் வாங்கும் விலையில் வெளிவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாகனம் ஓட்டுபவருக்கு மிகச் சிறந்த ஸ்திரத்தன்மையை அளிக்கும் வகையில் இதன் இருக்கை 740 மி.மீ. உயரத்தில் உள்ளது. அத்துடன் கால்களை மிகச் சவுகரியமாக வைத்து பயணிக்கும் வகையில் இதில் இட வசதியும் உள்ளது.
இதன் முகப்பில் எல்.இ.டி. விளக்கு உள்ளது. அதேபோல மிகவும் அழகான தோற்றம் உடைய பின்புற விளக்கு உள்ளது. இதன் விளக்கு வெளிச்சம் மிகத் துல்லியமாக, தொலைவில் வரும் வாகனங்களுக்குத் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள டிஜிட்டல் மீட்டர் பல்வேறு தகவல்களைக் கொண்டது. வாகனத்தின் வேகத்தை உணர்த்த ஸ்பீடா மீட்டர், ஓடோமீட்டர், எரிபொருள் அளவை உணர்த்தும் வசதி, இன்டிகேட்டர் ஆகியவற்றை ஓட்டுபவர் தெரிந்துகொள்ளும் வகையில் கனகச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது.
பின்னால் அமருபவரின் வசதிக்காக அலுமினியத்தால் ஆன கைப்பிடி வாகனத்துக்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. சீட்டுக்கு அடிப்பகுதியில் அதிக இடவசதி உள்ளது. இதன் மூலம் அன்றாட தேவைக்கான பொருட்களை மிகவும் கச்சிதமாக வைக்க முடியும். லக்கேஜ் பாக்ஸிலேயே சார்ஜிங் வசதி இருப்பதால், மொபைல் போனை பாதுகாப்பாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
இதில் ஒருங்கிணைந்த பிரேக்கிங் வசதி உள்ளது. பக்கவாட்டு ஸ்டாண்டு சுவிட்ச் உள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் புதிய ரக என்ஜின் இன்ஜெக்ஷன் பியூயல் சிஸ்டம் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 94 கி.மீ. ஆக இருந்துள்ளது. எரிபொருள் சிக்கனம் என்ற அளவில் சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 59 கி.மீ. தூரம் இது ஓடியுள்ளது.
இது யூரோ 3 புகை விதி சோதனைக்குட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பாரத் 6 புகைவிதிக்கு இது முற்றிலும் பொருந்தக் கூடியது. இதனால் இந்தியாவில் அறிமுகமாகும்போது இதில் மாற்றங்கள் செய்யவேண்டி இருக்காது.
இதில் ஹோண்டாவின் ஐ.எஸ்.எஸ். நுட்பம் உள்ளது. அதாவது வாகனம் சிக்னலில் நிற்கும்போது என்ஜின் தானாகவே ஆப்ஆகிவிடும். பின்னர் சிக்னல் விழுந்ததும் பின்புற பிரேக்கை அழுத்தினால் ஸ்டார்ட் ஆகிவிடும்.
இதன் பிரேம் வடிவமைப்பில் மிகச் சிறப்பான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. லேசர் வெல்டிங் முறை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சி.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ்.ஐ.எஸ்.எஸ். என இரு மாடல்களில் இது 11 கண்கவர் வண்ணங் களில் வந்து உள்ளது.
இந்தோனேசியாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஜீனியோ அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story