வானவில் : வந்துவிட்டது ஜீப் கம்பாஸ் ‘டிரெய்ல் ஹாக்’


வானவில் : வந்துவிட்டது ஜீப் கம்பாஸ் ‘டிரெய்ல் ஹாக்’
x
தினத்தந்தி 3 July 2019 3:15 PM IST (Updated: 3 July 2019 3:15 PM IST)
t-max-icont-min-icon

ஜீப் நிறுவனத்தின் புதிய வரவான டிரெய்ல்ஹாக் எஸ்.யு.வி. மாடல் நீண்ட காலமாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. சாகசப் பயணம் மேற்கொள்வோரின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இது இருந்தது.

ஜீப் நிறுவனத்தின் புதிய வரவான டிரெய்ல்ஹாக் எஸ்.யு.வி. மாடல் நீண்ட காலமாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. சாகசப் பயணம் மேற்கொள்வோரின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இது இருந்தது. முதல் முறையாக டீசலில் இயங்கும் இந்த கார் ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதியோடு வந்துள்ளது. இது 173 ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 2 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ டீசல், மல்டிஜெட் 2 என்ஜினைக் கொண்ட இது பி.எஸ்.6 புகை விதி சோதனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

சாகசப் பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவு 30 மி.மீ. அதிகரிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் ஓட்டுவதற்கு ஏற்ப ஹில்டிசென்ட் கண்ட்ரால் இதில் உள்ளது. இது தவிர பனி, மணல், சகதி ஆகியவற்றில் ஓட்டுவதற்கு ஏற்ப ‘ஓட்டுனர் தேர்வு’ நிலையை தேர்வு செய்ய முடியும். இதில் உள்ள 8.4 அங்குல தொடுதிரை மிகச் சிறப்பான பொழுது போக்கு அம்சங்களை வழங்கும். சாவி தேவைப்படாத ஆன்-ஆப் பட்டன், குரூயிஸ் கண்ட்ரோல் ஆகியன இதில் உள்ள சிறப்பு வசதிகளாகும்.

மேலும் அனைத்து மாடலிலுமே சன் ரூப் வசதி உள்ளது. பவரில் இயங்கும் டிரைவர் சீட், தாமாக எரியும் முகப்பு விளக்கு, பாதுகாப்புக்கு 6 ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.எஸ்.சி., டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ரியர் கேமரா உள்ளிட்ட அம்சங்களோடு இது வந்துள்ளது.

சாகச பயணத்தை விரும்புவோர் அதுவும் டீசலில் இயங்கும் ஆட்டோ கியர் வசதியோடு வந்துள்ள ஜீப் டிரெய்ல்ஹாக்கை நிச்சயம் விரும்புவர்.

Next Story