4 மாத நிலுவை சம்பளம் கேட்டு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்


4 மாத நிலுவை சம்பளம் கேட்டு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 July 2019 11:00 PM GMT (Updated: 3 July 2019 5:30 PM GMT)

4 மாத நிலுவை சம்பளம் கேட்டு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதை கண்டித்தும், கோர்ட்டு தீர்ப்புப்படி 2009-10-க்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ.-க்கும் பிடித்தம் செய்கிற பணத்தினை உரிய இடத்தில் கட்டுவதை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் முதல் 72 மணிநேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் தொடங்கினர்.

நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரத போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேவராஜ், மாவட்ட செயலாளர் அஸ்லம்பாஷா, பொருளாளர் கோபி, தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜூ, செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் சண்முகம் மற்றும் துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், சமயபுரம், லால்குடி பகுதியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் காரணமாக தொலை தொடர்பு நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இன்று(வியாழக்கிழமை) 3-வது நாளாக நடக்கிற உண்ணாவிரத போராட்டத்தில் கரூர், குளித்தலை, முசிறி, புதுக்கோட்டை, மணப்பாறை பகுதிகளில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்கிறார்கள்.

Next Story