விபத்துகளை கண்காணிக்க வி.கைகாட்டி ஜங்ஷனில் 4 கேமராக்கள்
விபத்துகளை கண்காணிக்க வி.கைகாட்டி ஜங்ஷனில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வி.கைகாட்டி,
திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி ஜங்ஷன் வழியாக பல்வேறு சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச்செல்லும் லாரிகள் அதிகளவில் சென்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து மிகுந்த நிலையிலேயே காணப்படும். இதனால் அடிக்கடி விபத்துகள், போக்குவரத்து விதிமீறல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் நடைபெறும் விபத்துகளை கண்காணிக்கவும், விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கையாக தனியார் சிமெண்டு ஆலை நிறுவனத்தின் சார்பில் வி.கைகாட்டியை மையமாகக்கொண்டு முட்டுவாஞ்சேரி, ஜெயங்கொண்டம், திருச்சி மற்றும் அரியலூர் சாலை போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
தொடக்கம்
அந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டினை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை வாசித்தார். அப்போது வாகன ஓட்டிகள் அதனை திரும்பக்கூறி உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன் உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story