குறை தீர்க்கும் நாள் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை இல்லை; முதல்-அமைச்சர் தனிப்பிரிவு புகாரும் கவனிக்கப்படாத நிலை
விருதுநகர் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாளில் தரப்படும் புகார் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து வரும் புகார் மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்படுகிறது. அப்போது மாவட்டம் முழுவதிலும் இருந்து குறிப்பாக கிராமங்களில் இருந்து பொதுமக்கள் நேரடியாக வந்து புகார் மனுக்கள் தரும் நிலை உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி குழுக்கள் இல்லாத நிலையில் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்கள் அதிகமாக தரப்படுகின்றன. இதுதவிர முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு பொதுமக்கள் அனுப்பும் புகார் மனுக்கள் உரிய நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகம் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மனுக்கள் தரும்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடு ஆகியவற்றை குறிப்பிட்டு மனுதாரருக்கு ஒப்புகை சீட்டு தரப்படுகிறது. ஆனால் ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுப்பது இல்லை. இதனால் சம்பந்தப்பட்ட மனுதாரர் தொடர்ந்து புகார் மனு அளிக்கும் நிலை ஏற்படுகிறது.
உடனடியாக நிறைவேற்ற சாத்தியம் இல்லாத பிரச்சினை குறித்து புகார் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுவதும் இல்லை. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் வரும் புகார் மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ள போதிலும் அந்த மனுக்கள் மீதும் உரிய கவனம் செலுத்தப்படாத நிலை நீடிக்கிறது.
தொடர்ந்து மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயல்வது, தர்ணா போராட்டம் நடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
கடந்த திங்கட்கிழமை கூட ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த காளியம்மாள் என்ற பெண் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி 3 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தியபோது போலீசார் அப்புறப்படுத்த முயற்ச்சித்த போது மயங்கி விழுந்தார். இந்த மாதிரி சம்பவங்களால் பொதுமக்கள் இடையே அவநம்பிக்கை ஏற்படும் நிலை உருவாகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் குறைதீர்க்கும்நாளில் கொடுக்கப்படும் மனுக்களின் மீதும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து வரும் புகார் மனுக்கள் மீதும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story