அதிராம்பட்டினத்தில் கடல் உள்வாங்கியது மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
அதிராம்பட்டினத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
அதிராம்பட்டினம்,
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சிறிய வகை பைபர் படகுகள் மூலமாக கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, காந்திநகர், அதிராம்பட்டினம் கரையூர் தெரு, ஆறுமுககிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரை தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தளங்கள் உள்ளன.
இந்த பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். ஒரு சில கட்டு மரங்கள் மூலமாகவும் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.
நேற்று வழக்கம்போல அதிகாலை 2.30 மணி அளவில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்காக அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பகுதி கடற்கரைக்கு வந்தனர். அப்போது கடல் பல அடி தூரத்திற்கு உள்வாங்கி இருந்தது. இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் உடனடியாக தங்களுடைய படகுகளை நிறுத்தி வைத்திருந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.
அங்கு தண்ணீர் இன்றி படகுகள் தரை தட்டியபடி நின்று கொண்டிருந்தன. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளுக்கு திரும்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மீனவர்களிடம் கேட்டபோது, அதிராம்பட்டினம் பகுதியில் கடல் பல அடி தூரம் உள்வாங்கி உள்ளது. இவ்வாறு பல அடி தூரம் கடல் உள்வாங்கி இருப்பது இதுவே முதல் முறை என்றனர். கடல் உள்வாங்கியது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பலர் கடற்கரைக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Related Tags :
Next Story