திருவாரூர் அருகே கோவிலில், சாமி சிலைகளை உடைத்த 5 சிறுவர்கள் கைது
திருவாரூர் அருகே பெரியநாயகி அம்மன் கோவிலில் சாமி சிலைகளை உடைத்த 5 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள தொழுவனங்குடி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்திட திட்டமிடப்பட்டு கடந்த ஒரு ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவில் கோபுரத்தில் இருந்த 15 அம்மன் சிலைகளின் கை, கால்கள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் இருந்த 12 சிங்கம் சிலைகளின் வால்கள் சேதப்படுத்தபட்டு இருந்தது.
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்குப்பதிவு செய்து கிராம மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் சாமி சிலைகளை உடைத்து இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் சாமி சிலைகளை உடைத்து, அதில் உள்ள கம்பியை விற்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த 5 சிறுவர்களையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

Related Tags :
Next Story