நாகை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு


நாகை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு
x
தினத்தந்தி 4 July 2019 4:30 AM IST (Updated: 4 July 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்,

நாகை கோட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வேளாங்கண்ணி- வேதாரண்யம் சாலையில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்படுத்தும் பணிகளையும், செங்காதாலை-வேதாரண்யம் சாலையில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்துதல் மற்றும் பாலம் கட்டும் பணியையும், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் செங்காதாலை-வேதாரண்யம் சாலையில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகளையும், ரூ.1 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து குரவப்புலம் ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயனாளி ஒருவருக்கு பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில்் கட்டப்பட்ட வீட்டினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரெயில்வே மேம்பாலம்

மேலும் தலைஞாயிறு முதல் அவரிக்காடு வரை நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகளையும் மற்றும் நாகை புத்தூர் ரவுண்டானா அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்வழுதி,் உதவி கோட்ட பொறியாளர்கள் திரு.சுரேஷ் (வேதாரண்யம்) உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story