அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,
காரப்பிடாகை வடக்கு கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசினை கண்டித்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே காரப்பிடாகை கடைத்தெருவில் பொதுமக்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சமூக ஆர்வலர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். தி.மு.க. கிளை செயலாளர் கருணாநிதி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் தமிழ்பாண்டியன், விவசாய தொழிற் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது காரப்பிடாகை வடக்கு கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசினை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர் அணியை சேர்ந்த நடராஜன், விடுதலை சிறுத்தை கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story