கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணியை வாயில் கட்டி சாலைப்பணியாளர்கள் போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணியை வாயில் கட்டி சாலைப்பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 July 2019 4:30 AM IST (Updated: 4 July 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணியை வாயில் கட்டி சாலைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கையில் சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடந்தது.

அப்போது சாலைப்பணியாளர்கள் கருப்புதுணியை வாயில் கட்டி மவுன போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் மாரி தலைமை தாங்கினார். செயலாளர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார்.

அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சுரேஷ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் பிச்சை, சிவக்குமார், தெய்வேந்திரன், வீரையா, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி, அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story