மலாடில் சுவர் இடிந்த விபத்தில் மேலும் 3 பேர் சாவு : பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு


மலாடில் சுவர் இடிந்த விபத்தில் மேலும் 3 பேர் சாவு : பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 July 2019 4:45 AM IST (Updated: 4 July 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

மலாடில் சுவர் இடிந்த விபத்தில் மேலும் 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மும்பை,

மும்பையில் கடந்த திங்கட்கிழமை இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது, மலாடு கிழக்கு பிம்பிரிபாடா மலை அடிவாரத்தில் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து அங்குள்ள குடிசை வீடுகள் மீது விழுந்தன. இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் குடிசைவாசிகள் சிக்கிக்கொண்டனர்.

மீட்பு பணியின் போது, சஞ்சிதா என்ற சிறுமி உள்பட மொத்தம் 21 பேர் பிணமாகவும், காயங்களுடன் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மும்பையில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் ஒருவர் உள்பட மேலும் 3 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதன் மூலம் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்தது.

படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு உள்ள 72 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லேசான காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 23 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Next Story