வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது


வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது
x
தினத்தந்தி 4 July 2019 4:34 AM IST (Updated: 4 July 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது சபீர் அகமது (வயது 48). அக்குபஞ்சர் டாக்டராக உள்ளார்.

இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரிடம் வேலை பார்த்த பெண் ஒருவர், தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், ‘டாக்டர் முகமது சபீர் அகமது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மேற்பார்வையில் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் முகமது சபீர் அகமதுவை நேற்று கைது செய்தனர். அவர் மீது புகார் கொடுத்த வேலைக்கார பெண்ணுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story