கம்மாபுரத்தில், தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்


கம்மாபுரத்தில், தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 4 July 2019 4:00 AM IST (Updated: 4 July 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

கம்மாபுரத்தில் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்மாபுரம், 

கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடக்கும் குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தலைவர் ராஜா தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் சுழற்சி முறையில் வேலை கொடுக்க வேண்டும், சம்பள பாக்கி குறித்து கேட்கும் தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் சரியான பதில் அளிப்பது இல்லை.

நாடாளுமன்ற தேர்தலின் போது 2 நாட்கள் விடுப்பு கொடுக்கப்பட்டது. அந்த 2 நாட்களுக்குரிய ஊதியத்தையும் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பேரில் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், வட்ட செயலாளர் அசோகன், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், வீரமணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story