விழுப்புரத்தில், தெற்கு ரெயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு
விழுப்புரத்தில் தெற்கு ரெயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்ட முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஆர்.கே.மேத்தா திடீரென வருகை தந்தார்.
இவர் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ரெயில்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதோடு ரெயில் நிலையத்தில் உள்ள விபத்து மீட்பு ரெயில் பெட்டியில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் உள்ளனவா? என பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து இவர் சிறப்பு ரெயில் மூலம் விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலம் வரை சென்று தண்டவாளம் உறுதித்தன்மையுடன் உள்ளதா? என்றும் இந்த வழித்தடத்தில் ரெயில்கள் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படலாம் என்றும் ஆய்வு செய்தார். மேலும் ரெயில்வே கேட், சிக்னல்கள் செயல்படும் விதத்தையும் மற்றும் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டில் போடப்பட்டுள்ள சுரங்கப்பாதையையும் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஆர்.கே.மேத்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் இன்று (வியாழக்கிழமை) விழுப்புரம்- புதுச்சேரி இடையேயும், விழுப்புரம்- கடலூர் இடையேயும் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறார்.
Related Tags :
Next Story