கிருஷ்ணகிரியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைத்த போலீசார்
கிருஷ்ணகிரியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டி களை போலீசார் நீண்ட நேரம் காத்திருக்க வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் போக்குவரத்து போலீசார் நேற்று மதியம் 2 மணி அளவில் பெங்களூரு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை மகளிர் போலீஸ் நிலையம் அருகில் நிற்க வைத்தனர். அவ்வாறு 100-க்கும் மேற்பட்டவர்களை பிடித்த போலீசார் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வந்து காட்டி தான் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் இங்கிருந்து செல்ல முடியாது என்றனர். பல வாகன ஓட்டிகளும் மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு சென்ற நேரத்தில் இவ்வாறு போலீசார் நிறுத்தியதால் அவர்கள் அவதிக்குள்ளானார்கள்.
பலரும் தங்களிடம் இப்போது பணம் இல்லை. நாங்கள் ஹெல்மெட் வாங்கி அணிந்து கொள்கிறோம் என்று கூறியும், போக்குவரத்து போலீசார் அவர்களை அங்கிருந்து விடவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகளை போலீசார் காத்திருக்க வைத்ததால் அவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
ஹெல்மெட் அணியாமல் சென்றது குற்றம் தான். அதற்காக ரூ. 100 அபராதமோ அல்லது ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்லுங்கள் என்று விழிப்புணர்வோ ஏற்படுத்தலாம். மாறாக மதிய உணவு சாப்பிட செல்கிற நேரத்தில், வாகன ஓட்டிகளை நிறுத்தி ஒருமையில் அவர் களை பேசுவதை கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story