மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசியில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + In Nellai, Thenkasi Road Staff Demonstrd

நெல்லை, தென்காசியில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை, தென்காசியில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தென்காசியில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,

தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலைப்பணியாளர் சங்கம் நெல்லை கோட்டம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கற்பகம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் செய்யது யூசுப்கான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சாலைப்பணியாளர்கள் கண்களை கருப்பு துணி கட்டியும், காதுகளை பொத்திக் கொண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கோட்ட பொருளாளர் முருகன், செயலாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தென்காசியில் சாலைப்பணியாளர் சங்கத்தினர் முகத்தில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் முகமது முஸ்தபா தலைமை தாங்கினார். வட்ட கிளை துணை தலைவர்கள் சோமசுந்தரராஜ், ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் வேல்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரை சிங், சாலைப்பணியாளர் சங்க மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் பேசினார்கள். முடிவில் சாலைப்பணியாளர் சங்க கோட்ட பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் பரபரப்பு: 2-வது மாடியில் இருந்து குதித்து கருப்புக்கட்டி வியாபாரி சாவு - வேதனையில் தாயும் தற்கொலை
நெல்லையில் 2-வது மாடியில் இருந்து குதித்து கருப்புக்கட்டி வியாபாரி பரிதாபமாக இறந்தார். இதனால் வேதனை அடைந்த அவருடைய தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. நெல்லையில் கட்டிட தொழிலாளி கொலை: 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை
நெல்லையில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. நெல்லையில் மூப்பனார் உருவப்படத்துக்கு காங்கிரஸ்- த.மா.கா.வினர் மாலை அணிவிப்பு
ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளையொட்டி நெல்லையில் அவருடைய உருவப்படத்துக்கு காங்கிரஸ், த.மா.கா.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
4. நெல்லையில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த முதியவரால் பரபரப்பு
நெல்லையில் நேற்று பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
5. நெல்லை, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் புதிய அரசு விரைவு பஸ்கள் - அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்
நெல்லை, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய புதிய அரசு விரைவு பஸ்களை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார்.