குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி ஆர்ப்பாட்டம்
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முறையாக குடிநீர் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணகி, மாநில குழு உறுப்பினர் சிவாஜி காந்தி, மாதர் சங்க மாவட்ட தலைவர் மஞ்சுளா, நகர துணை செயலாளர்கள் கருப்பையா, ராஜா, பழனியம்மாள் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் நகரச் செயலாளர் ரிச்சர்ட் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். அவர்கள் நகர மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதேபோல திருப்புவனத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் சந்தை திடலில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்புவனம் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
திருப்புவனம் நரிக்குடி சாலையில் நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில் விபத்துக்களை தடுக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சவுந்திரபாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் மோகன், வீரபுத்திரன், ராஜேந்திரன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story