பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு 8-ந் தேதி முதல் அமல்?
பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு திட்டத்துக்கு மும்பை பெருநகர போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. இதனால் கட்டண குறைப்பு 8-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
மும்பை,
மும்பையில் ரெயில்களுக்கு அடுத்தப்படியாக பொதுமக்கள் அதிகளவில் பெஸ்ட் பஸ்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் கடந்த 10 ஆண்டுகளாக பெஸ்ட் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து வருகிறது. இதற்கு அதிகமாக உள்ள பெஸ்ட் பஸ் கட்டணம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தற்போது ரூ.8 (2 கி.மீ. வரை) குறைந்தபட்ச பெஸ்ட் கட்டணமாக உள்ளது. இதை ரூ.5 (5 கி.மீ. வரை) ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு பெஸ்ட் கமிட்டி மற்றும் மும்பை மாநகராட்சி ஒப்புதல் அளித்து உள்ளன.
இந்தநிலையில் பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு திட்டத்துக்கு மும்பை பெருநகர போக்குவரத்து ஆணையமும் ஒப்புதல் அளித்து உள்ளது.
இதையடுத்து வரும் 8-ந் தேதி முதல் பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பெஸ்ட் செய்தி தொடர்பாளர் அனுமந்த் கொபானே கூறுகையில், ‘‘பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு திட்டத்துக்கு பெருநகர போக்குவரத்து கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை வெளியிட இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம்’’ என்றார்.
Related Tags :
Next Story