மலாடில் சுவர் இடிந்து 26 பேர் பலியான விபத்து குறித்து விசாரிக்க நிபுணர் குழு


மலாடில் சுவர் இடிந்து 26 பேர் பலியான விபத்து குறித்து விசாரிக்க நிபுணர் குழு
x
தினத்தந்தி 5 July 2019 5:58 AM IST (Updated: 5 July 2019 5:58 AM IST)
t-max-icont-min-icon

26 பேரை பலி கொண்ட மலாடு சுவர் இடிந்த விபத்து குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை மாநகராட்சி நியமித்தது.

மும்பை, 

மும்பை மலாடு பிம்பிரிபாடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் மழையின் போது அங்குள்ள மலையடிவாரத்தில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து அங்குள்ள குடிசை வீடுகள் மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் அன்றைய தினம் மட்டும் 21 பேர் உயிரிழந் தனர்.இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 26 ஆக அதிகரித்தது. படுகாயம் அடைந்த 72 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த துயர விபத்து குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்தநிலையில், இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்கு மாநகராட்சி நிபுணர் குழு ஒன்றை நியமித்து உள்ளது. இந்த குழுவில் மும்பை ஐ.ஐ.டி., வீர்மாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப நிறுவன நிபுணர்கள் மற்றும் மாநகராட்சியின் நீர்பொறியியல் துறை அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர்.

இவர்கள் 15 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் அந்த தடுப்புச்சுவரை கட்டிய காண்டிராக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நிபுணர்குழு விசாரணையின் போது, காண்டிராக்டர் தரமற்ற பொருட்களை கொண்டு அந்த சுவரை கட்டியதாக கண்டறியப்பட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story