நாகையில் முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகையில் முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநில பொது செயலாளரும், தஞ்சை மாவட்டம் மனையேரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருமான ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக நாகை மாவட்ட தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் வைத்தியநாதன், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
மனையேரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட அமைப்பு செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் வேங்கடசுப்பிரமணியன், துணைத்தலைவர் பத்மநாபன், நாகை கல்வி மாவட்ட தலைவர் செங்குட்டுவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story