தூத்துக்குடியில், 18-ந்தேதி மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம்


தூத்துக்குடியில், 18-ந்தேதி மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 6 July 2019 3:15 AM IST (Updated: 5 July 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வருகிற 18-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 18-ந்தேதி காலை 11 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கத்தில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.

குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஸ்மார்ட் கார்டு அசல் மற்றும் நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் புகைப்படம் ஆகியற்றை கொண்டுவர வேண்டும். இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story