நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடியினர் நேற்று தஞ்சம் அடைந்தனர். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியை சேர்ந்தவர் பேராட்சி செல்வி (வயது 20). இவர் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவரும், அதே கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்த மானூர் அருகே உள்ள வெங்கலப்பொட்டல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் கடந்த 4-1-2019 அன்று வீட்டைவிட்டு வெளியேறி சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஆந்திர மாநில எல்கையில் குடித்தனம் நடத்தி வந்தனர். தற்போது மானூர் அருகே உள்ள வெங்கலபொட்டல் கிராமத்திற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பேராட்சி செல்வியும், சுரேசும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், பேராட்சி செல்வி, தான் சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளதால் தனது உறவினர்களால் தனக்கும், கணவர் சுரேஷ் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படலாம். அப்படி ஆபத்து ஏற்படாத வண்ணம் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story