135 நிமிடங்கள் இடைவிடாமல் பட்ஜெட் புத்தகத்தை வாசித்தது பெண்ணின் பலத்தை காட்டுகிறது - நிர்மலா சீதாராமனுக்கு ஷோபா எம்.பி. பாராட்டு
135 நிமிடங்கள் இடைவிடாமல் பட்ஜெட் புத்தகத்தை வாசித்தது, பெண்ணின் பலத்தை காட்டுவதாக நிர்மலா சீதாராமனை ஷோபா எம்.பி. பாராட்டியுள்ளார்.
பெங்களூரு,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று 2019-20-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், 135 நிமிடங்கள் இடைவிடாமல் தொடர்ச்சியாக பட்ஜெட் புத்தகத்தை வாசித்துள்ளார். இடையில் எங்கும் நிறுத்தாமல், தண்ணீர் குடிக்காமல் வாசித்துள்ளார். ஆயினும் அவர் சோர்வடையவில்லை. இது பெண்ணின் பலத்தை காட்டுகிறது. அவரை நான் பாராட்டுகிறேன்.
வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க 144 நாட்களில் 2 கோடி வீடுகளை கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் எனக்கு முழு திருப்தி தந்துள்ளது. பெண்கள் அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்களாக உள்ளதை நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு பேசினார். இவ்வாறு ஷோபா எம்.பி. கூறினார்.

Related Tags :
Next Story