ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரியில் 16-ந் தேதி மனித சங்கிலி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வருகிற 16-ந் தேதி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கூட்டணி கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி, அரசு கொறடா அனந்தராமன், தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் தமிழ்மாறன், ம.தி.மு.க. தலைவர் கபிரியேல் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, இது தொடர்பாக 5 பேர் கொண்ட குழு அமைமத்து, வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதகங்கள் குறித்து மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், ‘கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் இருந்து ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில் புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.ஆனால் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என பிரதமருக்கும், பெட்ரோலியத்துறை மந்திரிக்கும் கடிதம் எழுதியுள்ளேன். புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். இதற்காக ஆட்சியே கவிழ்ந்தாலும் கவலைப்படமாட்டோம்.இதுதொடர்பாக வருகிற 10-ந் தேதி மத்திய பெட்ரோலியத்துறைமந்திரியை சந்திக்க உள்ளோம்’ என்றார்.

Related Tags :
Next Story