பெண்ணாடத்தில், கார் டிரைவர் தூக்குப்போட்டு சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக பெண் கைது
பெண்ணாடத்தில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் கைது செய்யப்பட்டார்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் கடை வீதி பாரதி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(வயது 48) கார் டிரைவர். இவருக்கு ஸ்ரீதேவி(36) என்ற மனைவியும், வைஷ்ணவி(19) என்ற மகளும் உள்ளனர். வைஷ்ணவி சென்னையில் தங்கி இருந்து விமான பணிப்பெண்ணாக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் தனது மகளை பார்த்து வருவதற்காக ஸ்ரீகாந்த், அவரது மனைவியுடன் கடந்த 2-ந் தேதி சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை பெண்ணாடத்துக்கு வந்தனர்.
காலையில் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக ஸ்ரீதேவி காலி குடத்துடன் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீ்ட்டின் படுக்கை அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந் தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதேவி ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது ஸ்ரீகாந்த் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தை பார்த்து கதறி அழுதார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடோடி வந்தனர். பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் பெண்ணாடம் போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய ஸ்ரீகாந்த் உடலை இறக்கி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீகாந்த், பெண்ணாடம் அருகே உள்ள மாளிகை கோட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி ராஜலட்சுமி(42) என்பவரிடம் வட்டிக்கு ரூ.4 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் ஸ்ரீகாந்த் கஷ்டப்பட்டார்.
இது குறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் ராஜலட்சுமி, ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஸ்ரீகாந்த் ரூ.1 லட்சம் மட்டுமே திருப்பி கொடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜலட்சுமி ஸ்ரீகாந்த்தை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஸ்ரீகாந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீதேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஸ்ரீகாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story