30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரே‌‌ஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரே‌‌ஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2019 4:30 AM IST (Updated: 6 July 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌‌ஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று காலை தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். தலைவர் குமார், இணை செயலாளர்கள் தனசேகரன், கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணே‌‌ஷ், தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை அமைக்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பொது வினியோக திட்டப்பணிகள் முழுவதையும் கணினி மயமாக்கிட வேண்டும், பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி பணிவரன்முறை செய்ய வேண்டும், ரே‌‌ஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கழிவறையுடன் கட்டப்பட வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்க துணைத்தலைவர்கள் கோபிநாதன், தட்சிணாமூர்த்தி, தன்ராஜ், இணை செயலாளர் பழனிவேல், நிர்வாகிகள் பெருமாள், ஜெகதீஸ்வரி, ஏழுமலை உள்பட ரே‌‌ஷன் கடை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் ராஜ் நன்றி கூறினார்.

Next Story