நீர் மேலாண்மை திட்டப்பிரிவு கண்காணிப்பு அறை கலெக்டர் பிரபாகர் திறந்து வைத்தார்
நீர் மேலாண்மை திட்டப்பிரிவு கண்காணிப்பு அறையை கலெக்டர் பிரபாகர் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் மேலாண்மை இயக்க திட்டப்பிரிவு (ஜல் சக்தி அபியான்) குறித்து நாளை (திங்கட்கிழமை) முதல் 10-ந் தேதி வரை 3 நாட்கள் மத்திய அரசின் கூடுதல் செயலாளர், இயக்குனர்கள், பொறியியல் வல்லுனர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நீர் மேலாண்மை திட்டப்பிரிவு கண்காணிப்பு அறையை கலெக்டர் பிரபாகர் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பொதுபணித்துறை ஆகிய துறைகள் சார்பாக நீர் மேலாண்மை திட்ட பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை கண்காணிக்கும் பொருட்டு நீர் மேலாண்மை திட்டப்பிரிவு கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின்போது ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலர் லோகேஸ்வரி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ஆறுமுகம், திட்ட அலுவலர் ஜாகீர் உசேன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கண்காணிப்பாளர் சுந்தரபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story