மாவட்ட செய்திகள்

கோஷ்டி மோதல்; தாய்-மகன் கைது பெண் வக்கீல் உள்பட 5 பேர் மீது வழக்கு + "||" + Factional confrontation; Mother and son arrested over 5 including woman lawyer

கோஷ்டி மோதல்; தாய்-மகன் கைது பெண் வக்கீல் உள்பட 5 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல்; தாய்-மகன் கைது பெண் வக்கீல் உள்பட 5 பேர் மீது வழக்கு
மயிலாடுதுறை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் தாய்-மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் பெண் வக்கீல் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே உள்ள திருவிளையாட்டம் கால்வாய்க்கரை தெருவை சேர்ந்தவர் அந்தோணிதாஸ் (வயது 60). இவருடைய மகன் மோசிக்ராஜ். சம்பவத்தன்று மோசிக்ராஜ் தரப்புக்கும், திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்த விஜயராகவன் (30) தரப்புக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் அந்தோணிதாஸ் மற்றும் அவருடைய மகள்கள் வக்கீல் நிர்மலா, சர்மிளா, மகன்கள் வின்சென்ட்ராஜ், மோசிக்ராஜ் ஆகிய 5 பேரும் காயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்தோணிதாஸ் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார், விஜயராகவன், அவருடைய தாய் துளசி (48) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதேபோல் துளசி கொடுத்த புகாரின்பேரில் அந்தோணிதாஸ், அவருடைய மகள் வக்கீல் நிர்மலா உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வக்கீல்கள் ஜெகதராஜ், சங்கமித்ரன் உள்ளிட்டோர் மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- வக்கீல் நிர்மலாவின் வீட்டின் அருகில் ஏசுராஜ், விஜயராகவன் ஆகிய 2 பேரும் சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் பிடித்து வழக்கும் பதிவு செய்துள்ளனர். இதற்கு காரணம் வக்கீல் நிர்மலா குடும்பத்தினர் தான் எனக்கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்மலா வீடு புகுந்து தாக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர்கள் முன் விரோதம் காரணமாக வக்கீல் நிர்மலா குடும்பத்தினரை மீண்டும் தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வக்கீல் நிர்மலா குடும்பத்தினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வேதாரண்யத்தில் இரு தரப்பினர் மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு; ஜீப்புக்கு தீ வைப்பு வன்முறையால் பதற்றம்
வேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
2. இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தகராறு இருதரப்பினரிடையே மோதல்; 9 பேர் படுகாயம்
இலுப்பூர் அருகே இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த தகராறில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் படுகாயமடைந்தனர். 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் மோதல்; வாலிபருக்கு வெட்டு, சகோதரர்கள் கைது
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாலிபருக்கு கத்தியால் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. மாமல்லபுரம் அருகே பஸ்- கார் மோதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் பலி
மாமல்லபுரம் அருகே பஸ்-கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.
5. மாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார்? என்பதில் பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்
மாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார்? என்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் இடையே நேற்று மாலை பயங்கர மோதல் ஏற்பட்டது.