சேலம் கோட்டத்தில் 20 புதிய பஸ்களின் இயக்கம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்


சேலம் கோட்டத்தில் 20 புதிய பஸ்களின் இயக்கம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 July 2019 4:15 AM IST (Updated: 7 July 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு 20 புதிய அரசு பஸ்கள் ஒதுக்கப்பட்டன. இந்த பஸ்களின் இயக் கத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

சேலம், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு புதிதாக வாங்கப்பட்ட 500 பஸ்களை பயணிகள் பயன்பாட்டிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு 20 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த பஸ்களின் தொடக்க விழா நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், சக்திவேல், மனோன்மணி, வெற்றிவேல், சின்னதம்பி, சித்ரா, அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனர் சேனாதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து கலெக்டர் ராமன் புதிய பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன்படி, சேலம்-சிவகாசி, எடப்பாடி-ஈரோடு, எடப்பாடி-கோபி, ஆத்தூர்-பழனி, ராசிபுரம்-நாமக்கல், நாமக்கல்-சென்னை, நாமக்கல்-கோவை ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு 7 பஸ்கள் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சவுண்டப்பன், அண்ணா தொழிற்சங்க சேலம் மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன், அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட துணை மேலாளர்கள் குமார், ஜீவரத்தினம், லட்சுமணன், மோகன்ராஜ், கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story