வனத்துறையினர் விரட்டியதால் ஆவேசம்: ஊருக்குள் புகுந்த காட்டுயானை, வாகனங்களை சேதப்படுத்தியது
ஊருக்குள் புகுந்த காட்டுயானை, வனத்துறையினர் விரட்டியதால் ஆவேசம் அடைந்து வாகனங்களை சேதப்படுத்தியது. இதை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செளுக்காடி பகுதியில் காட்டுயானை ஒன்று நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் காட்டுயானை அப்பகுதியில் இருந்து செல்லவில்லை. இதனால் நேற்று விடியற்காலையிலும் காட்டுயானையை விரட்டும் பணி தொடர்ந்தது.
பின்னர் அங்குள்ள கூடலூர்- கேரள சாலைக்கு காட்டுயானை வந்தது. அப்போது காலை 6½ மணிக்கு கூடலூரில் இருந்து மேபீல்டு பகுதிக்கு சென்ற அரசு பஸ்சை வழிமறித்தது. இதனால் பஸ்சில் அமர்ந்து இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். இதையடுத்து பின்தொடர்ந்து வந்த வனத்துறையினர் காட்டுயானையை விரட்டினர். இதனால் ஆவேசம் அடைந்த காட்டுயானை மீண்டும் செளுக்காடி பகுதிக்குள் நுழைந்தது.
வாகனங்களை சேதப்படுத்தியது
இதை கண்ட அப்பகுதி பொதுமக்களும் அலறியடித்து ஓடினர். அவர்களை காட்டுயானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கோயா, நவுசாத் ஆகியோரின் கார், ஜீப்பை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தியது. இதில் 2 வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தன. பின்னர் பொதுமக்களின் உதவியுடன் காட்டுயானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, காட்டுயானை தினமும் ஊருக்குள் வருவதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு பீதியுடன் சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே காட்டுயானை ஊருக்குள் வருவதை தடுக்க அகழி வெட்ட வேண்டும் என்றனர்.இதேபோல் கெவிப்பாரா உள்பட பல இடங்களிலும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

Related Tags :
Next Story