மாவட்ட செய்திகள்

செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + The teenager committed suicide after her husband denounced her for spending too much time on the cellphone

செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி சென்னீர்குப்பம், எஸ்.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி(26). இவர்களுக்கு 1½ வயதில் மகதி என்ற பெண் குழந்தை உள்ளது.

மகாலட்சுமி, வீட்டில் இருக்கும்போது அதிகநேரம் செல்போனில் பேசி வந்ததாகவும், இதனை கார்த்திக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. மகாலட்சுமியின் பெற்றோர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

எனினும் இதில் மனம் உடைந்த மகாலட்சுமி, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டுக்கு சென்ற மகாலட்சுமியின் பெற்றோர், மீண்டும் வந்து பார்த்தபோது குழந்தை அழும் சத்தம்கேட்டது.

கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது மகாலட்சுமி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகாலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 2 மகள்களுடன், தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பெங்களூருவில், கள்ளத்தொடர்பை கைவிட கணவர் மறுத்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தற்கொலையை தவிர்ப்போம்
தற்கொலை என்பது குற்றமா? அல்லது தனிப்பட்டவர்களின் உரிமையா? என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே விடைகொடுத்து விட்டாலும் தற்கொலை தீர்வா? பிரச்சினைகளின் தொடக்கமா? அதைத் தவிர்க்க முடியுமா? தடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
3. சேலத்தில் ரெயில் முன்பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை
சேலத்தில் ரெயில் முன்பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கடனை திருப்பி கொடுக்காததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
4. ராமநாதபுரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் தற்கொலை
ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5. போரூரில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
போரூரில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.