மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே மாட்டு வண்டி போட்டி + "||" + Near Nellai Cow Carriage Competition

நெல்லை அருகே மாட்டு வண்டி போட்டி

நெல்லை அருகே மாட்டு வண்டி போட்டி
நெல்லை அருகே நடுவக்குறிச்சியில் மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நெல்லை,

நெல்லை அருகே உள்ள நடுவக்குறிச்சி உடையார்குளம் புதிய சாமி சுடலை மாடசாமி கோவில் கொடை விழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டிகள் நேற்று நடுவக்குறிச்சி வீரராகவ பெருமாள் கோவில் திடலில் நடந்தது. நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா கொடியசைத்து மாட்டு வண்டி போட்டிகளை தொடங்கி வைத்தார்.இதில் பெரிய மாட்டு வண்டிப்போட்டிகள், சின்ன மாட்டு வண்டி போட்டிகள் என தனித்தனியாக நடத்தப்பட்டன. மேலும் குதிரை வண்டி போட்டியும் நடந்தது.

பெரிய மாட்டு வண்டி போட்டியில் வெலங்குடி உதயம் துரைப்பாண்டியன் வண்டிக்கு முதல் பரிசும், கண்ணன் வண்டிக்கு 2-வது பரிசும், மேலபுத்தநேரி செல்வபெருமாள் வண்டிக்கு 3-வது பரிசும் கிடைத்தது. சின்ன மாட்டு வண்டி போட்டியில் வள்ளியூர் ஆனந்த் வண்டிக்கு முதல் பரிசும், நடுவக்குறிச்சி முண்டசாமி வண்டிக்கு 2-வது பரிசும், அனவரதநல்லூர் காவேரி அம்மாள் வண்டிக்கு 3-வது பரிசும் கிடைத்தது.

குதிரை வண்டி போட்டியில் வல்லநாடு விநாயகம் வண்டிக்கு முதல் பரிசும், அமைச்சர் கடம்பூர் ராஜூ வண்டிக்கு 2-வது பரிசும், தச்சநல்லூர் சதீஷ் வண்டிக்கு 3-வது பரிசும் கிடைத்தது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா பரிசு வழங்கினார். விழாவில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
நெல்லை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
2. நெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஆந்திர தொழில் அதிபரை காரில் கடத்திய 2 பேர் கைது மேலும் 6 பேருக்கு வலைவீச்சு; திடுக்கிடும் தகவல்கள்
நெல்லை அருகே குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ஆந்திர தொழில் அதிபரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
4. நெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேர் பற்றி உருக்கமான தகவல்கள்
நெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேரை பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.
5. நெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு
நெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.