மோடியின் சதிக்கு கர்நாடகம் இரையாகாமல் இருக்கட்டும் டுவிட்டரில் காங்கிரஸ் ஆக்ரோஷம்


மோடியின் சதிக்கு கர்நாடகம் இரையாகாமல் இருக்கட்டும் டுவிட்டரில் காங்கிரஸ் ஆக்ரோஷம்
x
தினத்தந்தி 8 July 2019 4:30 AM IST (Updated: 8 July 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் சதிக்கு கர்நாடகம் இரையாகாமல் இருக்கட்டும் என்று டுவிட்டரில் தனது ஆக்ரோஷத்தை காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது.

பெங்களூரு, 

காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

முகமது பின் துக்ளக்கை போல் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி, நன்னெறி, அறநெறி இல்லாத அரசியல்வாதி. அவர் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் ஒதுக்கிவிட்டு, ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் 10 மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பணியை செய்கிறார். மோடியின் சதிக்கு கர்நாடகம் இரையாகாமல் இருக்கட்டும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்து கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கூட்டணி அரசின் துக்ளக் ஆட்சியால் வெறுப்படைந்த மக்கள், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற வைத்தனர். உங்களின் தவறான ஆட்சியால் வெறுப்படைந்த சொந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். பா.ஜனதா மீது குறை கூறுவதை விட்டுவிட்டு இப்போதாவது வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.

Next Story