வாலாஜாவில் 2 வீடுகளில் கொள்ளை


வாலாஜாவில் 2 வீடுகளில் கொள்ளை
x
தினத்தந்தி 8 July 2019 3:45 AM IST (Updated: 8 July 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

2 வீடுகளில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வாலாஜா, 

வாலாஜா ராஜீவ்காந்தி நகரில் வசிப்பவர் அருணாசலம். இவர், வாலாஜாவில் வங்கி ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்பிகா அமெரிக்காவில் உள்ளார். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அருணாச்சலமும் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் முரளி. இவர் வீட்டின் மேல்மாடியில் வசித்து வருகிறார். இவரது கீழ் வீட்டில் ஒழுகூர் கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரன் வாடகைக்கு வசித்து வருகிறார். சிவசங்கரன் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவில் 6 பேர் கொண்ட கும்பல் அரை நிர்வாணத்துடன் அருணாசலம் மற்றும் சிவசங்கரன் ஆகியோரின் வீட்டின் படுக்கை அறைகளில் உள்ள ஜன்னல்களை கழற்றிவிட்டு உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அருணாசலம் வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் பட்டு சேலைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை கொள்ளை போனதாக தெரிகிறது.

இதுபற்றி சிவசங்கரனுக்கு போலீசார் போனில் தகவல் தெரிவித்தனர். திருப்பதியில் இருந்து அவர் வந்த பின்னரே அவரது வீட்டில் கொள்ளை போன பொருட்கள் குறித்த விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story