விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2019 4:57 AM IST (Updated: 8 July 2019 4:57 AM IST)
t-max-icont-min-icon

விளை நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து பெருமாநல்லூர் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெருமாநல்லூர்,

விவசாய விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது பெருமாநல்லூரை அடுத்த பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதியிலும் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்மின் கோபுரம் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் காளம்பாளையம் நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் அய்யம்பாளையம் பழனிச்சாமி தலைமை தாங்கி னார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டியக்கத்தை சேர்ந்த முத்து, மயில்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வகுமார், கிராமிய மக்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விளைநிலங்களில் எந்திரங்களை வைத்து பயிர்களை சேதம் செய்வது, போலீசார் மூலம் விவசாயிகள் மீது அடக்குமுறையை மேற்கொள்வது, கலெக்டரின் விசாரணை முடிவடையும் முன்பே பணிகள் மேற்கொள்வது, விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் விளைநிலங்களில் பணிகள் மேற்கொண்டு வருவது ஆகியவற்றை கண்டித்தும், இதுதொடர்பாக பெருமாநல்லூரில் அனைத்து கட்சியினர் மற்றும் விவசாய அமைப்புகளை திரட்டி மீண்டும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story